• Download mobile app
13 Feb 2026, FridayEdition - 3656
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விபத்து நேரங்களில் பாதுகாத்து கொள்வது குறித்து தீயணைப்பு துறையினர் ஒத்திகை நிகழ்ச்சி

July 1, 2022 தண்டோரா குழு

விபத்து நேரங்களில் பாதுகாத்து கொள்வது குறித்து தீயணைப்பு துறையினர் ஒத்திகை நிகழ்ச்சிகை நடத்தினர்.

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் கோவை மாவட்ட தெற்கு தீயணைப்பு துறையினர், விபத்து நேரங்களில் நம்மை எவ்வாறு பாதுகாத்து கொள்வது, விபத்தில் சிக்கியுள்ளவர்களை எவ்வாறு மீட்பது குறித்தான ஒத்திகையை நடத்தினர்.

இதில் எவ்வாறான பாதுகாப்பு உபகரணங்கள் எல்லாம் உள்ளன என்றும் அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. மேலும் பாதுகாப்பு துறையினரிடம் உள்ள தொழில்நுட்ப பொருட்கள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
தெற்கு தீயணைப்பு நிலை அலுவலர் வேலுச்சாமி இவற்றை குறித்து விளக்கமளித்தார்.

மேலும் விபத்துகள் ஏற்படும் போது உடனடியாக காவல்துறை தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்க வேண்டுமென கேட்டுகொண்டார்.இந்த ஒத்திகை நிகழ்ச்சியை வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த அலுவலர்கள் பொதுமக்கள் பார்வையிட்டனர்.

மேலும் படிக்க