• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விபத்தில் வாலிபர் உட்பட 2 பேர் பலி

February 15, 2022 தண்டோரா குழு

கோவையில் வெவ்வேறு பகுதிகளில் நடந்த சாலை விபத்துகளில் வாலிபர் உட்பட 2 பேர் பலியாகினர்.

கோவை மயிலம்பட்டி கருப்பராயன் பாளையத்தை சேர்ந்தவர்முனுசாமி(37). இவர் நேற்று தொட்டிபாளையம் அருகே உள்ள செரயாம்பாளையம்ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ எதிர்பாராத விதமாக பைக்கில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த முனுசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது தொடர்பாக கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார்வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கோவைப்புதூர் காமாட்சி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் வசந்த குமாரி(60).இவர் நேற்று கோவைப்புதூர்-சுண்டாக்காமுத்தூர் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோ அவர் மீது மோதி இறந்தார். இது தொடர்பாக கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு
செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க