• Download mobile app
13 Nov 2025, ThursdayEdition - 3564
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விபத்தில் பிபின் ராவத் உயிரிழந்தது நெஞ்சை அடைக்கிறது – தமிழிசை சவுந்திரராஜன்

December 9, 2021 தண்டோரா குழு

கோவை சூலூரிலிருந்து குன்னூர் ராணுவ பயிற்சி பள்ளிக்கு ஹெலிகாப்டரில் நேற்று சென்றபோது ஏற்பட்ட விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, பிபின் ராவத் உட்பட 13 ராணுவ அதிகாரிகளின் உடல்கள் அஞ்சலிக்காக வெலிங்டன் ராணுவ தளத்தில் வைக்கப்பட்டது.

இந்நிலையில், தெலுங்கானா ஆளுநர்
தமிழிசை சவுந்திரராஜன் பிபின் ராவத் உட்பட 13 ராணுவ அதிகாரிகளின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

விபத்தில் பிபின் ராவத் உயிரிழந்தது நெஞ்சை அடைக்கிறது.அவருக்கு அஞ்சலி செலுத்த ஓடோடி வந்துள்ளேன். ஒரு மருத்துவராக, சிகிச்சை பெற்று வரும் விமானி வருணை பார்வையிட்டேன்.அவரது உள்ளுறுப்புகள் சீராக செயல்பட்டு வருகிறது.இளைஞர்கள் இந்த நேரத்தில் தேசப்பற்றுடன் இருக்க வேண்டும் எனக் கூறினார்.

மேலும் படிக்க