• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விபத்தில் உயிரிழந்த பத்திரிகையாளர் குடும்பத்திற்கு 5 லட்சம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு !

May 30, 2022 தண்டோரா குழு

கோவையில் தி இந்து நாளிதழில் பணியாற்றி வந்த மூத்த பத்திரிகையாளர் கார்த்திக் மாதவன் உத்திரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஊடகத்துறையில் 19 ஆண்டுகாலம் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் , டெக்கான் கிரானிக்கல் மற்றும் தி ஹிந்து நாளிதழ்களில் பணியாற்றிய கார்த்திக் மாதவன் நேற்று ( 29.5.2022 ) இரவு உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்தார் என்பதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்

கார்த்திக் மாதவன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,ஊடகத்துறை நண்பர்களுக்கும் இத்துயர்மிகு நேரத்தில் எனது ஆறுதலையும்,ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும்பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதித் திட்டத்தின் கீழ் சிறப்பு நேர்வாக, கார்த்திக் மாதவன் அவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க