• Download mobile app
26 Oct 2025, SundayEdition - 3546
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள்

June 13, 2025 தண்டோரா குழு

அகமதாபாத் விமான விபத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம் விபத்து ஏற்பட்டதில் 241 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில், அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கோவை கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் இன்று பள்ளி வளாகத்தில் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினர்.

சீருடை அணிந்து, 265 மெழுகுவர்த்தி மற்றும் மலர்களுடன் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலியைச் செலுத்தினர்.மேலும்,நிகழ்வில் ஆசிரியர்களும் கலந்து கொண்டு தங்கள் அனுதாபத்தையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தினர்.

பள்ளி தலைவர் என்.அருள் ரமேஷ், விபத்தில் உயிரிழந்தோருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து, மாணவர்களுக்கு இரக்கம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்த்தெடுக்க இது போன்ற நிகழ்வுகள் முக்கி யத்துவம் வாய்ந்தது எனக் குறிப்பிட்டார்.“இது மிகுந்த வேதனையை ஏற்படுத்தும் நிகழ்வு. ஆனால் இவ்விதமான சோக தருணங்களில் மாணவர்களுக்கு மனித நேயத்தின் உண்மையான அர்த்தத்தையும், ஒற்றுமையையும் கற்றுத் தருகிறோம்,” எனத் தெரிவித்தார்.

பள்ளித் தாளாளர் பூங்கோதை அருள் ரமேஷ், பள்ளி முதல்வர் பூனம் சயல் மற்றும் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மேலும்,மாணவர்கள் இணைந்து எழுதிய அனுதாபக் குறிப்பு பதிக்கப்பட்ட பெரியபதாகை, அன்பின் குறியாக அகமதாபாத் அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க