• Download mobile app
27 Apr 2024, SaturdayEdition - 2999
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விபத்தில்காயம் அடைந்தவர்களின் உயிர்களை காப்பாற்றுவதற்கான அலர்டத்தான் 2022 நிகழ்ச்சி

October 16, 2022 தண்டோரா குழு

விபத்தில் காயம் அடைந்தவர்களின் உயிர்களை காப்பாற்றுவதில் அலர்ட் அமைப்பு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் முதல் முறையாக’ அலர்டத்தான் 2022 ‘ நிகழ்ச்சியை கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கொடிசியா மற்றும் பிஎஸ்ஜி மருத்துவமனைகளுடன் இணைந்து கோவையில் நடத்தியது.

இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமே விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி மருத்துவமனையில் அளித்து அருகில் உள்ள சேர்ப்பதாகும்.இதன் மூலம் பொதுமக்களுக்கு முதலுதவி மற்றும் அவசர காலங்களில் எப்படி செயல்படுவது என்பது குறித்து அலர்ட் அமைப்பு பயிற்சி அளிக்கிறது.விபத்து காலங்களில் உயிரைக் காப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 25 கிமீ மற்றும் 50 கிமீ சைக்கிள் பயணம்,5 கிமீ,10 கிமீ மற்றும் 2.5 கிமீ சைக்கிள் பயணம், மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கான முதன்மை ஸ்பான்சராக பஹ்வான் சைபர் டெக் நிறுவனமும் , இணை ஸ்பான்சர்களாக ப்ரொபெல், இன்பர்மேஷன் எவல்யூஷன்,மெஸ்ஸர்ஸ் கட்டிங்,அக்வா சப் , பிஎஸ்ஆர் சில்க்ஸ் ஆகிய நிறுவனங்களும் ஆதரவு அளித்தன.

இது குறித்து அலர்ட் அமைப்பின் தலைவர் மைக் முரளிதரன் பேசுகையில் ,

இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் பல்வேறு முன்முயற்சிகள் மூலம் விபத்தில் உயிருக்கு போராடும் மக்களை காப்பாற்ற 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சாதாரண மக்களுக்கு நாங்கள் பயிற்சி அளித்துள்ளோம். எங்கள் அமைப்பின் ஒவ்வொரு முயற்சியும் உயிர்களைக் காப்பாற்றும் நோக்கத்தை கொண்டுள்ளது.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நிர்ணயித்த இலக்கையும் நோக்கியும் உள்ளது – அதாவது ‘ ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அவசர காலங்களில் பயிற்சி ‘ என பேசினார்.

அலர்ட் நிறுவனர் கலா பாலசுந்தரம் பேசுகையில்,

எங்கள் அமைப்பு நடைபயிற்சி , ஓட்டம் மற்றும் சைக்கிள் பேரணி போன்றவற்றின் மூலம் சமூகத்தில் பாதுகாப்பு , முதலுதவி மற்றும் அவசரகால பராமரிப்பு உள்ளிட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முக்கியமாக செயல்பட்டு வருகிறது.இந்த ஆண்டு அலர்டத்தான் 2022 ‘ நிகழ்ச்சியை கோவையில் நடத்துவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.மேலும் அவசர காலங்களில் உயிரைக் காப்பாற்ற உதவும் உயிர்காக்கும் திறன்களைப் பற்றி கோவை மக்களுக்கு பயிற்சி அளிப்பதில் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார்.

இது குறித்து இந்த அமைப்பின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் ராஜேஷ் ஆர்திரிவேதி பேசுகையில்,

இந்த மாதம் முதல் ஆண்டு விழாவை கோவையில் கொண்டாடுகிறோம் . கடந்த ஓராண்டில் மட்டும் கோவையில் சுமார் 20 ஆயிரம் பேருக்கு முதல்நிலைப் பயிற்சி அளித்துள்ளோம் என்றார்.

மேலும் படிக்க