• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விபச்சார வழக்கில் வாணி ராணி சீரியல் நடிகை கைது !

June 2, 2018 தண்டோரா குழு

வாணி ராணி உள்ளிட்ட பல தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சங்கீதா பாலன்.ராம்கி நடித்த கருப்பு ரோஜாக்கள் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர்,அதற்குப்பின் சில படங்களில் நடித்தார்.

பின்னர்,சீரியலில் நடிக்கத் தொடங்கிய சங்கீதா பாலன்,குணச்சித்திர வேடங்களை விட வில்லி வேடங்களிலேயே அதிகமாக நடித்து வருகிறார்.இந்நிலையில்,சென்னை விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தனியார் ரிசார்டில் விபச்சாரம் நடப்பதாக சென்னை விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து,சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மைக்கேல் என்பவருக்கு சொந்தமான ரிசார்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு பல சின்னத்திரை நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

அப்போது போலீசார் நடத்திய விசாரணையில் பிரபல சின்னத்திரை நட்சத்திரமான சங்கீதா இளம் நடிகைகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக தெரியவந்தது.இதையடுத்து,அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.இதேபோன்று அவருடன் இருந்த சுரேஷ் என்ற நபரும் கைது செய்யப்பட்டார். மேலும் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 3 இளம் நடிகைகளையும் போலீசார் மீட்டனர்.

ஏற்கனவே,பாலியல் தொழில் செய்ததாக நடிகை புவனேஸ்வரி கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது புதிதாக ஒரு பிரபல நடிகை இதே புகாரில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க