• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வினோபாஜி நகர், பாரதி நகர் பகுதியில் நண்பர்கள் குழு சார்பில் பொங்கல் விளையாட்டு போட்டிகள்

January 18, 2023 தண்டோரா குழு

கோவை விளாங்குறிச்சி ரோட்டில் உள்ள வினோபாஜி நகர், பாரதி நகர் பகுதியில் நண்பர்கள் குழு சார்பில் பொங்கல் விளையாட்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதில் மாரத்தான் 50 மீட்டர் 100 மீட்டர் 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், கிரிக்கெட் பேட்டி, வாலிபால், கோலப்போட்டிகள்,ஸ்லோ சைக்கிள், ஸ்லோ பைக் ரேஸ், கயிறு இழுத்தல், உறியடி, ஸ்கிப்பிங், லக்கி கார்னர், பலூன் உடைத்தல், தண்ணீர் நிரப்புதல், மியூசிக்கல் சேர், என குழந்தைகள் துவங்கி ஆண்கள் பெண்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏற்ப பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

குறிப்பாக குனிந்து கட்டையை சுற்றி ஓடிச் செல்லும் விளையாட்டுப் போட்டி பார்வையாளர்களை சிரிப்பலையிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது. இறுதியாக போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் கோப்பைகள் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. தவிர போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் படிக்க