• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விநாயகர் சிலை ஊர்வலம் – கோவை மாநகரில் போக்குவரத்து மாற்றம்

September 1, 2022 தண்டோரா குழு

கோவை மாநகரில் நாளை (வெள்ளிக்கிழமை) விநாயகர் சிலை ஊர்வலமானது மதியம் 1 மணிக்கு குனியமுத்தூர் தர்மராஜ கோயிலிருந்து புறப்பட்டு குனியமுத்தூர், பாலக்காடு ரோடு வழியாக குனியமுத்தூர் குளத்தில் கரைக்கப்படுவதாலும், மதியம் 2 மணிக்கு போத்தனூர் சாரதா மில் ரோட்டில் ஆரம்பித்து சங்கம் வீதியில் ஒன்று கூடி சுந்தராபுரம் வழியாக பொள்ளாச்சி ரோட்டில் சென்று குறிச்சி குளத்தில் கரைக்கப்படுவதை முன்னிட்டு கீழ்கண்டவாறு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு 2ம் தேதி (நாளை) காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நகருக்குள் லாரிகள் இயக்க தடை விதிக்கப்படுகிறது. காலை 11 மணி முதல் பாலக்காடு ரோட்டிலிருந்து உக்கடம் நோக்கி வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் கோவைப்புதூர் – குளத்துபாளையம் ஆஸ்ரம் பள்ளி சந்திப்பு – புட்டுவிக்கி சாலை வழியாக உக்கடம் வந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும்.

அதே போல் காலை 11 மணி முதல் உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி
செல்லக்கூடிய வாகனங்கள் சுங்கம் – ராமநாதபுரம் – நஞ்சுண்டாபுரம் போத்தனூர் கடைவீதி – ரயில் கல்யாண மண்டபம் -சாரதா மில் ரோடு – சங்கம் வீதி – தக்காளி மார்க்கெட் வழியாக சென்று பொள்ளாச்சி சாலையை அடைந்து செல்லவேண்டிய
இடங்களுக்கு செல்ல வேண்டும்.

காலை 11 மணி முதல் உக்கடத்திலிருந்து குனியமுத்தூர் வழியாக பாலக்காடு செல்லும் வாகனங்கள் பேரூர் பைபாஸ் ரோடு – சேத்துமா வாய்க்கால் செக்போஸ்ட் வழியாக புட்டுவிக்கி ரோடு – வையாபுரி பள்ளி சந்திப்பு – கோவைப்புதூர் ஆஸ்ரம் பள்ளி சந்திப்பு குளத்துபாளையம் வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும்.

பொள்ளாச்சி சாலையிலிருந்து சுந்தராபுரம் வழியாக பாலக்காடு ரோடு செல்லும் பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் எல் அண்டு டி பைபாஸ் சாலை வழியாக -மதுக்கரை மார்கெட், மதுக்கரை மார்கெட் ரோடு – பிள்ளையார்புரம் சந்திப்பு சுகுணாபுரம் வந்து பாலக்காடு சாலையை அடைந்து செல்லவேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும்.

பொள்ளச்சி சாலையிலிருந்து சுந்தராபுரம் வழியாக உக்கடம் செல்லும் வாகனங்கள் கற்பகம் கல்லூரி சந்திப்பு – ஈச்சனாரி – சுந்தராபுரம் – ஆத்துப்பாலம் வழியாக உக்கடம் செல்ல வேண்டும்.பொள்ளாச்சி சாலை மற்றும் பாலக்காடு சாலை வழியாக கோவை வரும் கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் நகருக்குள் அனுமதியில்லை. அவை அனைத்தும் எல் அண்டு டி பையாஸ் சாலையில் தான் செல்லவேண்டும்.

மேலே கண்ட சாலைகள் வழியாக விநாயகர் சிலை ஊர்வலம் செல்ல இருப்பதால் ஊர்வலப் பாதையில் இருக்கும் வியபாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை மேற்படி பாதையில் நிறுத்துவதைத் தவிர்த்து மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க