September 9, 2021
தண்டோரா குழு
கோவை மாநகரின் பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலைகள் விற்பனை தீவிரமடைந்துள்ளது. சிறிதும் பெரிதுமாக விநாயகர் சிலைகளை வீடுகளில் வைத்து வழிபட பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழா கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் பல்வேறுமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் நாளை விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சாலையோரம் பொதுஇடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அரசு தடைவிதித்துள்ளது.
அதேசமயம் பொதுமக்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடலாம் என்றும், அவ்வாறு வீடுகளில் வைத்து வழிபடும் விநாயகர் சிலையை தனிநபர் எடுத்துச்சென்று நீர்நிலைகளில் கரைத்துக்கொள்ளலாம் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.