• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மை அணி தலைவர் ஆரோக்கிய ஜான் அன்னதானம்.

September 7, 2024

தமிழகம் எங்கும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.கோவை வடக்கு திமுக மாவட்ட செயலாளர் தெ.அ.ரவி அவர்களின் வழிகாட்டுதல் படி கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு 100 கோவில்களில் அன்னதானம் வழங்குவது என சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் ஆரோக்கிய ஜான் கூறினார்.

அதனை தொடர்ந்து பல்வேறு கோவில்களில் அன்னதானம் வழங்கி வருகின்றார்.அதனை தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் சர்க்கார் சாமகுளம் பேரூராட்சி குரும்பபாளையம் வையாபுரி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி கணபதி விநாயகர் திருக்கோயில் பக்தர்களுக்கு சுமார் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு வடக்கு மாவட்ட சிறுபான்மை அணி வடக்கு மாவட்ட தலைவர் ஆரோக்கிய ஜான் அன்னதானம் வழங்கினார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

தமிழின தலைவர்,திமுக தலைவர் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நினைவு விழாவை முன்னிட்டு,100 கோவில்களுக்கு கோவை வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மை அணி சார்பில் அன்னதானம் வழங்க திட்டமிட பட்டது. கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொ.அ.ரவி அவர்களின் வழிகாட்டுதல் படி கோவை வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கோவில்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றோம்.

இதன் தொடர்ச்சியாக விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு இன்று எஸ்.எஸ்
குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வையாபுரி நகரில் உள்ள சக்தி கணபதி விநாயகர் திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. என் கூறினார்.

மேலும் படிக்க