• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வித்தியாசமான பிரச்சாரத்தின் மூலம் எவ்வளவு வாக்குகள் பெற்றார் நடிகர் மன்சூர் அலிகான் !

May 23, 2019 தண்டோரா குழு

நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 7 கட்டங்களாக 542 தொகுதிகளுக்கு மக்களவை தேர்தல் நடைபெற்றது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தேர்தல் முடிவுகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. தற்போது வரை வெளியாகியுள்ள சுற்றின் முடிவுகளில் இந்தியா அளவில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது. அதேவேளையில் தமிழகத்தைப் பொறுத்தவரை 37 தொகுதிகளில் திமுக காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.

இதற்கிடையில், சீமானின் நாம் தமிழர் கட்சி மற்றும் கமல்ஹசானின் மக்கள் நீதி மய்யம் கட்சி பல்வேறு இடங்களில் 3,4 இடங்களை பெற்றுள்ளது. திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிட்டார். வித்தியாசமான முறையில் பிரச்சாரம் செய்து அவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இந்நிலையில் திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான் 3 மணி நிலவரப்படி 28,638 வாக்குகளைப் பெற்று 4-ம் இடத்தில் உள்ளார். அத்தொகுதியில் தொடர்ந்து முதலிடத்தில் திமுக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களவைத் தேர்தல் மட்டுமின்றி தமிழகத்தில் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதில் 13 தொகுதிகளில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக 9 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

மேலும் படிக்க