• Download mobile app
30 Aug 2025, SaturdayEdition - 3489
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விண்வெளியில் மராத்தான் ஓடி இங்கிலாந்து வீரர் சாதனை

April 27, 2016 தண்டோரா குழு.

இங்கிலாந்தைச் சேர்ந்த விண்வெளி வீரர் ஒருவர் விண்வெளியில் இருந்தபடி லண்டன் மாரத்தானில் கலந்து கொண்டு கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் டிம் பீக் என்ற விண்வெளி வீரர், இவர் சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த 6 மாதங்களாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு லண்டன் மராத்தான் போட்டியில் ஓட ஆசை ஏற்பட்டது. இதற்காக, சர்வதேச விண்வெளி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள ட்ரெட் மில் இயந்திரத்தில் லண்டன் மாரத்தான் போட்டியின் தூரமான 42.2 கி.மீ. தூரத்தை 3 மணிநேரம் 35 நிமிடங்கள் 21 வினாடிகள் ஓடி சாதனை படைத்துள்ளார்.

முன்னதாக போட்டி துவங்கும் முன் தனது டிவிட்டர் வலைத்தளத்தில் “ஹலோ லண்டன் ரசிகர்ளே ஓடலாமா“ என டுவிட் செய்துள்ளார். விண்வெளியில் ஈர்ப்பு அதிமாக இருப்பதால் தனது உடலில் ஒரு ஸ்ட்ராப்பை கட்டிக் கொண்டு ட்ரெட் மில்லில் ஓட்டியுள்ளார்.

மேலும், இதற்கு முன் இதேப் போன்று விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் போஸ்டன் மாரத்தானில் 4 மணி நேரம் 23 நிமிடங்கள் 10 நொடிகளில் கடந்துள்ளார். ஆனால் டிம் பீக் அதனைத் தூரத்தை 3 மணிநேரம் 35 நிமிடங்கள் 21 வினாடிகள் ஓடி சாதனை படைத்துள்ளார்.

இதன்மூலம், விண்வெளியில் வேகமாக மராத்தான் போட்டியில் ஓடிய வீரர் என்ற கின்னஸ் சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

மேலும் படிக்க