• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விண்வெளியில் நடந்த முதல் மனிதர் காலமானார்

October 11, 2019 தண்டோரா குழு

விண்வெளியில் நடந்த முதல் மனிதரான ரஷ்யாவின் அலெக்சி லியோனொவ்(85), உடல்நலக்குறைவால் காலமானார்.

சோவியத் யூனியன் என முன்னர் அழைக்கப்பட்ட ரஷியாவை சேர்ந்த விண்வெளி வீரர் அலெக்சி லியோனோவ் 18-3-1965 அன்று வோஸ்கோட் -2 விண்கலத்தை விட்டு வெளியேறி விண்வெளியில் 12 வினாடிகள் நடந்து சாதனை படைத்தார். இதன் மூலம் விண்வெளியில் நடந்த முதல் மனிதன் என்ற பெருமையைப் பெற்றவர்.

இந்நிலையில், உடல்நிலை சரியாமல் இருந்த லியோனொவ், மாஸ்கோவில் இன்று காலமானார்.அவருக்கு 85 வயது அவரது மறைவுக்கு ‘நாசா’ இரங்கல் தெரிவித்துள்ளது. மரணமடைந்த அலெக்சி லியோனோவ் ரஷிய ராணுவத்திலும் பின்னர் விமானப்படையிலும் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க