• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விஜய் சேதுபதி, கார்த்தி, பிரபுதேவா, யுவன் ஷங்கர் ராஜா, சந்தனாம் உள்ளிட்ட பலருக்கு கலைமாமணி விருது அறிவிப்பு !

February 28, 2019 தண்டோரா குழு

பல்வேறு கலைப்பிரிவுகளின் கீழ் 201 கலை வித்தகர்களுக்கு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுகளுடன் தலா ரூ.1 லட்சம் காசோலையுடன் சான்றிதழும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கலை, பண்பாட்டை வளர்ப்பதற்காகவும் தொன்மையான கலை வடிவங்களைப் பேணிக் காக்கவும் பல்துறை கலைஞர்களுக்கு தமிழக அரசால் கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ் வளர்ச்சி மற்றும் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் 1959-ம் ஆண்டில் இருந்து இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சினிமாவில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு, தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் கலைமாமணி விருது வழங்குவது வழக்கம். சிவாஜி கணேசன், எம்ஜிஆர், கருணாநிதி, முரசொலி மாறன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா உள்ளிட்ட 1,079 கலைஞர்களுக்கு இதுவரை கலைமாமணி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பல்வேறு கலைப்பிரிவுகளின் கீழ் 201 கலை வித்தகர்களுக்கு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுகளுடன் தலா ரூ.1 லட்சம் காசோலையுடன் சான்றிதழும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதைபோல், சினிமாவில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு, தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் கலைமாமணி விருது வழங்குவது வழக்கம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்தன. இந்நிலையில், 2011 முதல் 2018 வரை 8 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை மொத்தமாக அறிவித்துள்ளது.

விருதுகள் அறிவிக்கப்பட்டவர்களின் விவரம் பின்வருமாறு:

நடிகர்கள்

விஜய் சேதுபதி
கார்த்தி
பிரசன்னா
ஆர்.பாண்டியராஜன்
சசிகுமார்
ஸ்ரீகாந்த்
எம்.எஸ்.பாஸ்கர்
தம்பி ராமையா
சூரி
பொன்வண்ணன்
பிரபுதேவா
சரவணன்
பாண்டு
சந்தானம்
டி.பி.கஜேந்திரன்
பி.ராஜு
ஆர்.ராஜசேகர்
சிங்கமுத்து

நடிகைகள்

குட்டி பத்மினி
நளினி
சாரதா
காஞ்சனா தேவி
டி.ராஜஸ்ரீ
பி.ஆர்.வரலட்சுமி
பிரியாமணி
நடன இயக்குநர்கள்
புலியூர் சரோஜா
தாரா

பின்னணிப் பாடகர்கள்

சசிரேகா
கானா உலகநாதன்
கிருஷ்ணராஜ்
மாலதி
கானா பாலா
உன்னி மேனன்

காஸ்ட்யூம் டிசைனர்
காசி

ஒளிப்பதிவாளர்கள்

பாபு என்கிற ஆனந்த கிருஷ்ணன்
ரத்தினவேலு
ரவிவர்மன்

இயக்குநர்கள்

சித்ரா லட்சுமணன்
சுரேஷ் கிருஷ்ணா
பவித்ரன்
ஹரி

சண்டைப்பயிற்சி இயக்குநர்

ஜூடோ ரத்னம்

இசையமைப்பாளர்கள்

யுவன் ஷங்கர் ராஜா
விஜய் ஆண்டனி

பாடலாசிரியர்

யுகபாரதி

தயாரிப்பாளர்கள்

ஏ.எம்.ரத்னம்
கலைஞானம்

புகைப்படக் கலைஞர்கள்

ஸ்டில்ஸ் ரவி
சேஷாத்ரி நாதன் சுகுமாரன்

இவைதவிர, கவிஞரும் பாடலாசிரியருமான புலமைப்பித்தனுக்கு ‘பாரதி விருது’ம், பின்னணிப் பாடகி எஸ்.ஜானகிக்கு ‘எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது’ம் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க