சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டும் என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. செயல்தலைவருமான மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சனிக்கிழமை கூறியிருப்பதாவது; “தற்போது நடைபெற்று வரும் ஆளும் கட்சி ஆட்சியில் தமிழகம் மிகப்பெரிய தலைகுனிவை சந்தித்து வருகிறது என்பதற்கு இந்த வருமான வரித்துறை சோதனைகள் சாட்சியாக அமைந்துள்ளன.
இதற்கு முன்பு நடைபெற்ற சோதனைகள் பற்றி உரிய விளக்கத்தை மத்திய அரசு நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளான அமைச்சரின் வீட்டிற்கு மற்ற அமைச்சர்கள் சென்று ஆதரவு தெரிவிப்பதும் வருமான வரித்துறை அதிகாரிகளுடன் பிரச்னை செய்வதும் கடும் கண்டனத்திற்குரியது.
வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளான அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக தமிழக முதலமைச்சர் எடபாடி பழனிசாமி பதவி நீக்கம் செய்யவேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்யவேண்டும்.
ஊழலுக்கு துணை போன அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து அ.தி.மு.க. அமைச்சர்களின் ஊழல் சாம்ராஜ்ஜியத்திற்கு முடிவு கட்டும் வகையில் வருமான வரித்துறை தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும்.”
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்