October 26, 2020
தண்டோரா குழு
மாணவ,மாணவிகளின் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக கோவை மாவட்ட பா.ஜ.க.அரசு தொடர்பு பிரிவு சார்பாக அரசு பள்ளி மாணவ,மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
கோவை மாவட்ட பா.ஜ.க.அரசு தொடர்பு பிரிவு சார்பாக ஏழை குடும்பங்களுக்கு காப்பீடு,மற்றும் ஆதரவற்றோருக்கு உணவு வழங்குவது என பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக விஜய தசமியை முன்னிட்டு மாணவ,மாணவிகளின் கல்வி திறனை ஊக்குவிக்கும் விதமாக கல்வி உபகரணங்கள் வழங்கும் குறிச்சி மண்டல் பகுதியில் நடைபெற்றது.
பாஜக அரசு தொடர்பு பிரிவின் மாவட்ட தலைவர் ராஜன் ,மாவட்ட பிரபாரி ஜோதி, ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இதில் குறிச்சி மண்டல் தலைவர் மதிவாணன்,அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளர் கணபதி ஜான்சன்,துணை தலைவர்கள் மது, ஓம் ஆனந்த்,ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கணேசபுரம் அரசு பள்ளியை சேர்ந்த சுமார் 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், பென்சில், பேனா, போன்ற கல்வி உபகரணங்களுடன் முக கவசங்களையும் வழங்கினர்.…இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் அட்வகேட் புருசோத்தமன்,ஹரி,கமல்நாத் ராவ்,அச்சப்பன் ,குறிச்சி மண்டல் நிர்வாகிகள் கோகுலகிருஷ்ணன், வி.கே.பி.நந்தகுமார், சுரேஷ் மற்றும் ஆதரவாளர்கள் டாக்டர் துளசிதர்,ரகு, பலர் கலந்து கொண்டனர்.