• Download mobile app
07 Mar 2026, SaturdayEdition - 3678
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விசாகப்பட்டினத்தில் இந்தியாவின் முதல் ‘நெட்-ஜீரோ’ ஜிப்சம் சீலிங் டைல்ஸ் தொழிற்சாலை: செயிண்ட்-கோபெய்ன் – ஜிப்ராக் நிறுவனம் இணைந்து திறப்பு

March 7, 2026 தண்டோரா குழு

லேசான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டுமானப் பொருட்களில் முன்னணி நிறுவனமான செயிண்ட் – கோபெய்ன் இந்தியா மற்றும் ஜிப்ராக் நிறுவனங்கள் இணைந்து தனது புதிய தொழிற்சாலையை விசாகப்பட்டினத்தில் திறந்துள்ளன.

இது இந்தியாவின் முதல் ‘நெட்-ஜீரோ’ ஜிப்சம் சீலிங் டைல்ஸ் அதாவது. கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத ஆலை ஆகும். இந்த ஆலை மத்திய அரசின் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்திற்கான ஆதரவை வெளிப்படுத்தும் விதமாகவும் நாடு முழுவதும் உயர்தரமான சீலிங் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருவதை பூர்த்தி செய்யும் விதமாகவும் இந்த ஆலையை அமைத்துள்ளதாக இந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இது குறித்து செயிண்ட்-கோபெய்ன் ஜிப்ராக் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் சுதீப் கோல்டே கூறுகையில்,

“இந்த முதலீடு இந்தியாவில் எங்களின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதோடு இந்தியா முழுவதும் அனைத்து பகுதிகளுக்கும் சீலிங் பொருட்களைக் விரைவாக கொண்டு சேர்க்க உதவுகிறது. வணிக மற்றும் நிறுவனங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், சிறந்த உற்பத்தியையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் இணைப்பதே எங்களின் நீண்டகால திட்டமாகும். அந்த வகையில் இந்த விசாகப்பட்டினம் ஆலை திறக்கப்பட்டு உள்ளது” என்று கூறினார்.

கடந்த டிசம்பர் மாதம் திறக்கப்பட்ட இந்த அதிநவீன தொழிற்சாலை, ஆண்டுக்கு 50 லட்சம் சதுர மீட்டர் அளவிலான பொருட்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இங்கு ‘ஜிப்ரெக்ஸ் பிவிசி’ லேமினேட் செய்யப்பட்ட ஜிப்சம் சீலிங் டைல்ஸ் தயாரிக்கப்பட உள்ளது. இந்த ஆலை அமைந்துள்ள இடம், பொருட்களை விரைவாக சந்தைக்குக் கொண்டு செல்லவும், உலகளாவிய தரநிலைகளைப் பின்பற்றவும் உதவுகிறது.

இங்குள்ள நவீன தூசி சேகரிப்பு அமைப்பு உள்ளிட்ட மேம்பட்ட தொழில்நுட்பங்கள், பணியிட பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நிறுவனம் மேற்கொண்டு வரும் அக்கறையைக் காட்டுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் பொருட்கள் சர்வதேச தரநிலைகளான பிஎஸ் இஎன் 520 மற்றும் பிஎஸ் இஎன் 14190-ன் படி உற்பத்தி செய்யப்படுவதால், இவை நீண்ட காலம் உழைக்கக்கூடியவை. வரும் 2050-ம் ஆண்டிற்குள் கார்பன் வெளியேற்றத்தை முற்றிலுமாக குறைக்கும் செயிண்ட்-கோபெய்ன் நிறுவனத்தின் உலகளாவிய இலக்கிற்கு இந்த தொழிற்சாலை ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருக்கும்.

இந்த முதலீட்டின் மூலம், செயிண்ட்-கோபெய்ன் இந்தியா உள்நாட்டு உற்பத்தியை தொடர்ந்து பலப்படுத்தி வருகிறது. மேலும், இந்தியாவின் வளர்ந்து வரும் கட்டுமானத் தேவைகளுக்கு ஏற்ப, புதுமையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை வழங்குவதோடு, வாடிக்கையாளர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க