• Download mobile app
21 Oct 2025, TuesdayEdition - 3541
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஐ மதுரையில் அறிமுகப்படுத்தும் 5ஜி சேவைகள்

August 8, 2025 தண்டோரா குழு

முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான விஐ மதுரையில் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

பல்வேறு நகரங்களில் விஐ தனது சேவையை விரிவாக்கம் செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக மதுரையில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் 17 முன்னுரிமை மண்டலங்களைத் தேர்ந்தெடுத்து 5 ஜி சேவைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன.

இதற்கு முன்னர் விஐ மும்பை, டெல்லி, பெங்களூரு, மைசூரூ, நாக்பூர், சண்டிகர், ஜெய்ப்பூர், சோனிபட், பாட்னா, அகமதாபாத், ராஜ்கோட், சூரத், பரோடா, சத்ரபதி சம்பாஜி நகர், நாசிக், கோழிக்கோடு, மலப்புரம், மீரட் மற்றும் விசாகப்பட்டிணம் நகரங்களில் இந்த 5ஜி சேவை விரிவாக்கம் நடைபெற்றுள்ளது.

விஐ-ன் அடுத்த தலைமுறை நவீனத்தொடர்பு வசதியைப் பெறும் முதல் நகரமாக தமிழ்நாட்டில் மதுரை திகழ்கிறது. விஐ வாடிக்கையாளர்கள் மதுரையில் 5ஜி வசதிகொண்ட கருவிகளுடன் விஐ 5ஜி சேவைகளை நாளை முதல் பெறமுடியும். நவீன சேவைகளின் அறிமுகத் தள்ளுபடியாக விஐ தடையற்ற 5ஜி டேட்டாவை ரூ.299-லிருந்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

இதன்மூலம் வாடிக்கையாளர்கள் உயர்தொழில்நுட்பத் திறனில் ஸ்ட்ரீமிங், கேமிங், வீடியோ கான்பரன்சிங், டவுன்லோடுகள் மற்றும் கிளவுட் ஆக்சஸ் வசதிகளைப் பெறமுடியும்.

வோடஃபோன் ஐடியாவின் தமிழ்நாடு வட்டத்தின் மண்டல வர்த்தக தலைவரான ஆர் எஸ் சாந்தாராம் இது குறித்துப் பேசும்போது,

”மதுரையில் விஐ 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்துகையில் மல்லிகையின் நகரத்தில் தொலைபேசி சேவைத் தொடர்பின் எதிர்கால இலக்கை சாதித்துள்ளோம். அதிநவீன 5ஜி சேவைகளின் வழியாக, நாங்கள் தற்போது வழங்கி வரும் 4ஜி சேவைகளோடு, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தரம் மேம்படுத்தப்பட்ட அனுபவத்தையும் கூடுதல் தேர்வுகளையும் வழங்குகிறோம்.

நாங்கள் நிறுவன ரீதியாக எங்களது 5ஜி சேவைத் செயல்பாடுகளை விரிவுப்படுத்தி வருகிறோம். வளரும் தேவைகளுக்கேற்ப, 5ஜி கருவிகளுக்கு மாறுபவர்களின் தேவைகளையும் சரியாக நிறைவேற்றவுள்ளோம்.” தனது 5ஜி சேவைகள் அறிமுகத்தோடு, விஐ, தமிழ்நாட்டில் 4ஜி வலைப்பின்னலையும் மேம்படுத்தி கவரேஜ் மற்றும் கூடுதல் டேட்டா வேகத்தை சாத்தியப்படுத்தியுள்ளது.

இதன்மூலம் வாடிக்கையாளர்களின் அனுபவம் மேம்படும். 900 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரத்தை 5 ஆயிரம் இடங்களில் நிறுவி, வீடுகள், அலுவலகங்களுக்குள் டேட்டா திறனை அதிகப்படுத்தியுள்ளது. அத்துடன் 2 ஆயிரத்து 100 தலங்களில் முறையே 2 ஆயிரத்து 100 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் ஆயிரத்து 800 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் திறனை நிறுவி வலைப்பின்னல் கவரேஜை மேம்படுத்தியுள்ளதோடு 600 புதிய தலங்களையும் சேர்த்துக்கொண்டுள்ளது.

மேலும் படிக்க