• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாழ்வாதரம் மேம்பட மேம்பாலம் அமைத்திடுக தமிழக – கேரள மலைவாழ் மக்கள் கோரிக்கை

December 24, 2016 A.T. ஜாகர்

தமிழக – கேரள மலைவாழ் மக்களின் வாழ்வாதரம் மேம்பட கொடுங்கரை கோப்பணாரியிடையே மேம்பாலம் அமைக்க இரு மாநில அரசுகளுக்கு கேரள தமிழக மழைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த தோலம்பாளையம் அருகே உள்ளது கோப்பணாரி என்ற கிராமம். தமிழக கேரள எல்லை யோரத்தில் உள்ள இந்த கோப்பணாரி கிராமத்தைச் சுற்றி சுமார் 20க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்களும், கேரள மாநிலத்தைச் சேர்ந்த மன்னார்காடு தாலுக்காவிற்குட்பட்ட மலைவாழ் மக்களும், சோழியூர் பஞ்சாயத்து கிராம மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.

தமிழக கேரள மாநிலத்தின் எல்லைப்பகுதி என்பதால் உணவு பொருட்கள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு இரு மாநில மக்களுக்கும் ஒருவரை ஒருவர் சார்ந்தே இருந்து வருகின்றனர். மேட்டுப் பாளையம் பகுதியிலிருந்து தினமும் 300 டன் காய்கறிகள் கோப்பணாரி எல்லை வழியாக கேரளா மாநிலம் பாலக்காட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது.

தமிழக பகுதியான கோப்பணாரி கிராமத்தையும் கேரள பகுதியான சோழியூர் பஞ்சாயத்து கிராமத்தையும் இணைப்பது கொடுங்கரை பள்ளம். இப்பள்ளத்தில் பெரும்பாலும் குறைந்தளவு நீரே செல்வதால் அதனை கடந்து இரு கிராமத்தை சேர்ந்த மலைவாழ் மக்களும் தங்கள் வாகனங்கள் மூலம் அன்றாடக் கூலி வேலை, பள்ளி, கல்லூரி, மருத்துவமனை மற்றும் இதர வேலைகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில், மழைக்காலங்களில் இப்பள்ளத்தில் நீர் வரத்து அதிக மாகிவிடுவதால் தொடர்ந்து இந்த பாதையை உபயோகப்படுத்த முடியாத சூழல் உருவாகிறது. இதன் காரணமாக இருமாநிலங்களிடையே போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. நீர்வரத்து குறைந்த பின்னரே இப்பள்ளத்தை கடந்து செல்ல கூடிய சூழல் உள்ளதால் அப்பகுதியில் மக்கள் பெருமளவு சிரமத்திற்கு ஆளாக வேண்டிய நிலை உள்ளது.

இது குறித்து அப்பகுதிவாசி மதிவாணன் கூறுகையில்,

“வேலை வாய்ப்புகளுக்காக மண்ணார்காடு மற்றும் சோழியூர் பஞ்சாயத்திற்கு செல்லும் ஆதிவாசி மக்கள் மழைக்காலங்களில் வேலை வாய்ப்பினை இழக்கின்றனர். இதுமட்டுமின்றி மருத்துவ தேவைக்கு கூட மழைக்காலங்களில் செல்ல முடியாத சூழல் நிலவி வருகிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படுகிறது. இதற்காக இந்த பகுதியில் மேம்பாலம் அமைத்து தரக்கோரி இருமாநில அரசுகளிடம் நாங்கள் மனு அளித்துள்ளோம் என்றார்.

இது குறித்து பெயர் சொல்ல விரும்பாத வனத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது,

இக்கிராமங்கள் வனத்துறை பகுதியில் உள்ளதால் பாலம் கட்ட அனுமதி வாங்குவதில் சிரமம் உள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்படைய கூடாது என்பதற்காக அரசு பல திட்டங்களை வகுத்துள்ளது. பாலம் கட்டினால் வாகன எண்ணிக்கை அதிகரிக்கும் இதனால் அப்பகுதியில் மாசு ஏற்படும். அதைபோல் மழைவாழ் மக்களின் பயன்பாட்டிற்காக அவ்வழியாக போக்குவரத்தும் பாதிக்கப்படக் கூடாது. எனவே சுற்றுச்சூழல் பாதிக்காதவாறும் வாகன எண்ணிக்கை அதிகாரிக்காதவாறும் நடவடிக்கை மேற்கொண்ட பிறகே பாலம் கட்ட அனுமதிக்கப்படும் என்றார்.

தமிழக கேரள மலைவாழ் மக்களின் வாழ்வாதரம் மேம்பட கொடுங்கரை கோப்பணாரி இடையே மேம்பாலத்தை உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என்கிற மலைவாழ் மக்களின் கோரிக்கையை இரு மாநில அரசுக்களும் நிறைவேற்ற வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கருத்தாகும்.

மேலும் படிக்க