கொரோனா தொற்று நோய் ஆரோக்கியமான வாழ்க்கையின் முக்கியத்துவத்தை முழுமையாக நமக்கு உணர்த்தியுள்ளது. பி எஸ் ஜி செவிலியர் கல்லூரி மாணவ செவிலியர் சங்கம், நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் சமூக நல செவிலியர் துறை இணைந்து ஏப்ரல் 7, 2022 அன்று உலக சுகாதார தினத்தை “நமது உலகம் நமது ஆரோக்கியம் ” என்ற கருப்பொருளுடன் அனுசரித்தது.
யோகா பயிற்சி , உடல் நலக்கல்வி, குறு நாடகம், விளையாட்டுகள் மற்றும் பள்ளி சுகாதார மேளா போன்ற பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.யோகா உடலுக்கும் மனதுக்கும் ஒரு சிறந்த பயிற்சியாகும்.இது அமைதியையும் நினைவாற்றலையும் வழங்குகிறது மற்றும் நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
பீளமேடு பி எஸ் ஜி கிருஷ்ணம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆலோசகர் ஜலாதரன் பி எஸ் ஜி விளையாட்டு மைதானத்தில் காலை 7 மணிக்கு எளிய யோகாசனங்களை செய்து காண்பித்தார். இதில் சுமார் 400 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
பி எஸ் ஜி மருத்துவமனை‘பி’ பிரிவு வளாகத்தில் 2ம் ஆண்டு மாணவர்கள் குறு நாடகம், நலக்கல்வி மற்றும் விளையாட்டுகள் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
பள்ளி ஆரோக்கிய மேளா பி எஸ் ஜி வேடப்பட்டி மேல்நிலை பள்ளியில் 4ம் ஆண்டு மாணவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறை சுற்றுப்புற சுகாதாரம், நொறுக்கு தீனிகளால் ஏற்படும் தீமைகள் குறித்த பேஷன் ஷோ, உடற்பயிற்சி நடனம் மற்றும் ஊட்டச்சத்து கண்காட்சிகளை ஏற்பாடு செய்தனர்இதன்முலம் சுமார் 150 மாணவர்கள் பயனடைந்தனர்.
ஆரோக்கியமான உலகத்தை நோக்கி நகரும் வகையில் நிகழ்ச்சியின் முடிவில் பொதுமக்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் விதைகள் வழங்கப்பட்டது.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்