• Download mobile app
16 Aug 2025, SaturdayEdition - 3475
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாழ்க்கையில் வெற்றி பெற நாம் கடைபிடிக்க வேண்டிய ஐந்து ‘H’ – கோவை எஸ்.பி.பேச்சு !

November 16, 2021 தண்டோரா குழு

கோவை பார்க் கல்வி குழுமத்தில் இரண்டு பொறியியல் கல்லூரிகளின் முதலாம் ஆண்டு மாணவர்களின் வரவேற்பு நிகழ்ச்சி கனியூரில் உள்ள பார்க் பொறியியல் கல்லூரியில் உள்ள கலையரங்கில் இன்று நடைபெற்றது.

பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் டாக்டர் மோகன்குமார் வரவேற்பு உரையாற்றினார். LMW கோவையின் மனிதவள மேம்பாட்டு துறை மேலாளர் மஞ்சு கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கௌசல்யா கலந்து கொண்டு பெண்களின் பாதுகாப்பு மற்றும் ராகிங் செல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் முனைவர் அனுஷா ரவி, நாம் விவசாயிகளை தினமும் மூன்று முறை நினைத்துக் கொள்வோம் ஆனால் பொறியாளர்களை ஒவ்வொரு நிமிடமும் நினைவு கொள்ள வேண்டும். ஒவ்வொரு படைப்பிலும் பொறியாளரின் பங்களிப்பு உள்ளது என்று கூறினார்.

பார்க் கல்வி குழுமத்தின் தலைவர் முனைவர் ரவி, மாணவர்கள் பொறியியல் துறையை தேர்வு செய்ததற்காக பாராட்டி பேசினார்.
சிறப்பு விருந்தினராக கோவை காவல் கண்காணிப்பாளர், செல்வநாகரத்தினம் கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசுகையில்,

ஐந்து H பின்பற்றினால் வாழ்க்கையில் நமது இலக்கை அடைய முடியும் என்றார். ஐந்து ‘H’ பின்வருமாறு Hard Work (கடின உழைப்பு), Health(உடல் ஆரோக்கியம்), Habits(நல்ல பழக்க வழக்கம்), Honour (பிறரை மதித்தல்), Humanity(மனிதநேயம்).பின்பு அவர் மாணவர்களை புகையிலை மற்றும் மது அருந்த மாட்டேன், சாலை விதிகளை கடைபிடிப்பேன், தனது தனிப்பட்ட விவரங்களை இணையத்தில் பகிர மாட்டேன் என உறுதிமொழி ஏற்கச் செய்து உரையை நிறைவு செய்தார்.

முனைவர் ஹரிஹரன் நன்றியுரை நிகழ்த்தினார்.

மேலும் படிக்க