May 25, 2021
தண்டோரா குழு
ஜெனிவாவில் 1997-ல் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்களால் மனித மாண்புகளுக்கான சர்வேதச சங்கம், வாழும் கலையின் ஒரு அங்கமாக உருவாக்கப்பட்டது. மனிதகுலத்திற்கு எந்த நேரத்திலும் சேவையற்றிட தயாராக உள்ள ஒரு மாபெரும் தளமாக உள்ளது. தொற்று பரவும் இந்த காலநிலையில் வாழும் கலை அமைப்பின் கோவை கிளை, கோவிட் 19 நோயாளிகள், அவர்களின் உற்றார், உறவினர்களுக்கு உதவிட தேசிய அளவிலான தொலை தொடர்பு உதவி மையத்தை துவக்கியுள்ளது. மிஸ்ஸன் ஜிந்தகி என்ற இந்த திட்டத்தில், பணிகளை ஒன்றாக சேர்த்து, அவற்றை ஒருங்கிணைக்கும் பணியில் தேசிய அளவில் மேற்கொண்டு வருகிறது.
தன்னார்வத்தின் உந்துதலாக இந்த தொலைபேசி சேவையில், கோவிட் 19 நோய் தொற்றை எதிர்கொள்ள, மருத்துவமனைகளில் காலி படுக்கைகள், ஆக்சிஜன் அளிப்பவர்கள், மருந்துகள், ஆம்புலன்ஸ் வசதிகள், ஆன்லைனில் டாக்டர்களின் ஆலோசனைகள், கோவிட் சிகிச்சைக்கு முன்பும் பின்பும் மனநல திட்டங்கள் பற்றிய தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன. இந்த அமைப்பினர் கோவை அரசு மருத்துவமனைக்கு 400 பாதுகாப்பு கவசங்கள், 1000 என்95 முககவசங்கள், 2 ஆக்சிஜன் செறிவுட்டிகள், வழங்கியுள்ளன.
வாழும் கலை அமைப்பின் கோவை கிளை தன்னார்வலர்கள், தேவைகளின் அடிப்படையில், பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். அமெரிக்கா முதல் அபுதாபி வரையிலும், பண்ருட்டி முதல் பொள்ளாச்சி வரையிலும் தொடர்பு கொண்ட மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன் இரவு 11 மணி அளவில் அமெரிக்காவில் இருந்து ஒரு அழைப்பு வந்தது, கோவை அரசு மருத்துவமனையில் அவரது உறவினர் ஆக்சிஜன் இல்லாமல் தவிப்பதாக தெரிவித்தனர். எவ்வித தயக்கமும் இல்லாமல் உடனடியாக வாழும் கலை அணியினர் உதவி செய்தனர். மேலும் அவர்கள் ஒரு மனநலநிபுணரைக் கொண்டு, கோவிட் தொற்று பயத்தை போக்கினர். கோவையில் உதவி வேண்டுவோர் இந்த அமைப்பை தொடர்பு கொள்ளலாம்.
மனநல ஆலோசனைகள் ஆன்லைனில் இலவசமாக வழங்கப்படுகின்றன. இவை 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. 1. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தவும், நோய் தொற்றை தடுக்கவும் 20 – 30 நிமிட பயிற்சி (ஒரு வகுப்பிற்கு 40 பேர் மட்டும்) 3 நாட்கள் பயிற்சி திட்டம். 2. லேசான நோய் தொற்று அறிகுறிகள், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோருக்கு 15 முதல் 20 நிமிடங்கள் (ஒரு வகுப்பிற்கு 20 பேர் மட்டும்) 3 நாள் பயிற்சி திட்டம். 3. கோவிட் சிகிச்சைக்கு பின்னர் மறுவாழ்வுக்கு 20 – 30 நிமிடங்கள் (வகுப்பிற்கு 20 பேர் மட்டும்) 3 நாட்களுக்கான திட்டம். மேலும், 8 – 13 வயதுள்ள குழந்தைகளுக்கும், 13 – 18 வயதுள்ள குழந்தைகளுக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தனி வகுப்புகள் இலவசமாக நடத்தப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு பங்கஜவள்ளி 9600288613 – அனு ராதா 9444220143 – ஜெயஸ்ரீ மணிவண்ணன் 9789175897 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
வாழும் கலை அமைப்பின் கோயம்புத்தூர் உதவி மைய எண்கள் :- மருத்துவமனை சேவைகள் குழு :- சி. ரவிசந்திரன் – 9790200300, கர்ணன் – 9361012348 மற்றும் கே. ஆர். விஜயன் – 9443081750.
தொலைபேசி மருத்துவர்கள் உதவிக்கு தொடர்பு கொள்ள :- சுகுணா தேவி – 9994059297, சாந்தி – 9655451822, தேவி – 9361012346 மற்றும் இந்துமதி 9487535208.
கோயம்புத்தூரில் ஆக்சிஜன் தொடர்பான விபரங்களுக்கு :- சித்தரன்ஜன் தாஸ் – 9443356249, முத்துகிருஷ்ணன் – 98940 48662 மற்றும் பெங்களூரு – 99944 67526.
ஆம்புலன் சேவை உதவி மையம் :- என். சுரேஷ் குமார் – 9442635208 ரவி சங்கர் – 8637480472 சுரேஷ் பாபு – 9994046777 மற்றும் சுந்தரம் – 9843399362.
தன்னார்வலர்களை ஒன்றாக இணைத்து, சிறப்பாக ஒருங்கிணைத்து வருகிறார் சசிரேகா வெங்கடேஷ். இதற்கான உதவிகளை மண்டல தலைமை உறுப்பினர் என். சுரேஷ்குமார் பெற்று தருகிறார்.