• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வால்பாறை தேயிலை தோட்டத்தில் முகாமிட்டுள்ள 40க்கும் மேற்பட்ட யானைகள்

December 2, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டம் வால்பாறையில் 40க்கும் மேற்பட்ட யானைகள் தேயிலை தோட்டத்தில் முகாமிட்டு உள்ளதால் தேயிலை பறிக்கும் தொழில் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

வால்பாறை அடுத்துள்ள முத்துமுடி எஸ்டேட் பகுதியில் இன்று வனப்பகுதிக்குள் இருந்து திடீரென 40க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தேயிலை தோட்டத்திற்குள் புகுந்தன யானைகள் கூட்டம் கூட்டமாக தேயிலை தோட்டத்திற்குள் வருவதைப் பார்த்த தோட்ட தொழிலாளர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர் இதனால் அப்பகுதியில் தேயிலை பறிக்கும் தொழில் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது வனத் துறையினர் விரைந்து வந்து யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர் வால்பாறையில் முதல்முறையாக 40க்கும் மேற்பட்ட யானைகள் ஒரே இடத்தில் எனவே அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம்.இந்தப் பகுதியில் இருந்து யானைகள் அடுத்த பகுதிக்கு செல்லும்போது குடியிருப்பு பகுதிகள் நுழையாதவாறுவனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் மாலை வேளையில் தொழிலாளர்கள்அனைவரும் தங்கள் வீட்டின் முன்புறம் விளக்குகளை எரிய வைக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்40க்கும் மேற்பட்ட யானைகள் தேயிலை தோட்டத்தில் முகாமிட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

மேலும் படிக்க