• Download mobile app
13 Feb 2026, FridayEdition - 3656
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வால்பாறை கிராமத்தில் 21ல் மக்கள் தொடர்பு முகாம்- ஆட்சியர் அறிவிப்பு

May 3, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டம் வால்பாறை கிராமத்தில் வரும் 21ம் தேதி காலை 10.30 மணியளவில் கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. அக்கிராமத்தில் பொள்ளாச்சி சப் கலெக்டர் எதிர்வரும் 4ம் தேதி காலை 10.30 மணியளவில் வால்பாறை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் முன் மனுக்களை பெற உள்ளார்.

பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி பொள்ளாச்சி சப் கலெக்டரிடம் கொடுக்கலாம். மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் விசாரணை செய்து 21ம் தேதி நடைபெறவுள்ள மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது.

இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் படிக்க