• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாய்ப்பளித்தால் வார்டுக்கு தேவையான அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுவேன்

February 9, 2022 தண்டோரா குழு

மக்கள் சபை கூட்டத்தின் வாயிலாக பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்ததாகவும்,மேலும் தமக்கு வாய்ப்பளித்தால் வார்டுக்கு தேவையான அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுவேன் என 11 வது வார்டில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் சிரவை சிவா என்கிற பழனிசாமி உறுதியளித்துள்ளார்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டு சிவானந்தபுரம் பகுதியில் தி.மு.க.வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் சிரவை சிவா என்கிற பழனிசாமி போட்டியிடுகிறார். ஆளுங்கட்சி வேட்பாளராக போட்டியிடும் வேட்பாளர் சிவா கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சி செய்த அரசு எந்த வித அடிப்படை தேவைகளையும் வார்டு பகுதியில் நிறைவேற்றவில்லை எனவும்,கடந்த எட்டு மாதங்களாக கழக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்கள் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

குறிப்பாக அண்மையில் மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற மக்கள் சபை கூட்டங்களில் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டதாக கூறிய அவர்,,ஆளும் கட்சியாக உள்ள தாம் வெற்றி பெற்றால் இந்த பகுதியில் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

மேலும் படிக்க