• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வானதி ஸ்ரீனிவாசனுடன் விவாதிக்க எங்கள் மாணவர் அமைப்பினரே போதும் – ம.நீ.ம.பொதுச்செயலாளர் அறிக்கை !

March 28, 2021 தண்டோரா குழு

வானதி ஸ்ரீனிவாசனுடன் விவாதிக்க எங்கள் மாணவர் அமைப்பினரே போதும் என ம.நீ.ம.பொதுச்செயலாளர்சிகே.குமாரவேல் கூறியுள்ளார்.

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் பொது செயலாளர் சிகே. குமாரவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மத்திய அமமச்சர் ஸ்மிருதி இராணி எங்கள் தமைவமர பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுடன் விவாதத்திற்கு அழைத்துள்ளார். விவாதம் செய்தால் தான் யாருக்கு நிர்வாக திறன் உள்ளது தெரியவரும் என்பது அவரது வாதம். அவரது சவாமை ஏற்றுக்கொள்கிறோம்.

முதலில் இந்தியாவை ஆளும் நரேந்திர மோடியுடன் எங்கள் தலைவர் விவாதம் செய்ய விரும்புகிறார்.அதையடுத்து,நிதியமமச்சர் நிர்மலா சீதாராமனுடன் விவாதம் செய்ய விரும்புகிறார்.அடுத்தடுத்து பாஜக அமைச்சரவையினர் ஒவ்வொருவருடனும் விவாதம் செய்து விட்டு வானதி ஸ்ரீநிவாசன் போன்ற துக்கடா தலைவர்களுடன் வைத்துக்கொள்ளலாம்.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி பிரதமருடனான நேரடி விவாதத்திற்கு ஏற்பாடு செய்யட்டும் ஏற்கனவே இருமுறை தேர்தலில் போட்டியிட்டு மக்களால் நிராகாிக்கப்பட்டு,
இப்போது மூன்றாவது முறையாக
தோற்க தயாராகிறவர் வானதி சீனிவாசன். எந்த ஆளுமையும் இல்லாத அவரோடு விவாதிக்க எங்கள் மாணவர் அணியினர் போதும்.

இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் படிக்க