• Download mobile app
09 Jul 2025, WednesdayEdition - 3437
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வாட்ஸ் அப் குரூப்பால் இளைஞர் உயிரிழப்பு

June 5, 2018 தண்டோரா குழு

ஹரியானா மாநிலத்தில் வாட்ஸ்அப் குருப்பினால் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறி 28 வயது இளைஞரை கொல்லப்பட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் சோனிபட் பகுதியைச் சேர்ந்தவர் லவ் ஜோகர்.இவர் அந்த பகுதியில் உள்ள அவர்கள் சமுதாயம் சார்ந்த தகவல்களை பரிமாறிக்கொள்ள வாட்ஸ்அப்பில் ஒரு குரூப் ஒன்றை உருவாக்கி அதன் அட்மினாக இருந்தார்.

இந்நிலையில் கடந்த ஞாயிறன்று குரூப் அட்மினான லவ் அவரது தனிப்பட்ட புகைப்படத்தை அந்த குரூப்பில் தெரியாமல் பகிர்ந்து விட்டார்.இதனால் இவருக்கும் குரூப்பில் இருந்த தினேஷ் என்பவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.இந்த பிரச்னையை பேசி தீர்த்துகொள்ளலாம் என்று அவரது விட்டிற்கு வருமாறு தினேஷ் லவ்-யை அழைத்துள்ளார்.

இதனையடுத்து,லவ் மற்றும் அவரது சகோதரர்கள் 3 பெரும் அங்கு சென்றனர்.தினேஷ் வீட்டில் பேச்சுவார்த்தை நடந்தது.ஆனால் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.தினேஷ் குடும்பத்தில் உள்ள அனைவரும் லவ் மற்றும் அவரது சகோதர்கள் மீது கல் மற்றும் குச்சியால் தாக்கினர். அதில் லவ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் அவரது மூன்று சகோதர்களும் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதையடுத்து தினேஷின் குடும்பத்தை சேர்ந்தவர் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தினேஷின் குடும்பத்தை சேர்ந்த அனைவரும் தலைமறைவாகி விட்டனர்.இதுதொடர்பாக நடத்திய விசாரணையில் தங்கள் சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்துவது யார்? என்பதில் ஏற்பட்ட பிரச்சனை தான் இந்த சண்டைக்கு காரணம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க