• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாட்ஸ் அப் உதவியுடன் பிரசவம் பார்த்த மருத்துவ மாணவர்

April 10, 2017 தண்டோரா குழு

எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு படிக்கும் மருத்துவ கல்லூரி மாணவர் ஒருவர், வாட்ஸ் அப் உதவியுடன் மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டு ரயிலில் தன்னுடன் பயணித்த பெண் ஒருவருக்கு பிரசவம் பார்த்துள்ளார்.

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரிலிருந்து ஓடிஸா மாநிலத்தின் புரி நகருக்கு அகமதாபாத்-புரி எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. அதில் எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு படிக்கும் விபின் க்ஹட்சே(24) பயணித்துள்ளார். அவருடன் சித்ரலேகா(24) என்னும் பெண்ணும் அவருடைய கணவர் மற்றும் உறவினர்களுடன் அகமதாபாத்திலிருந்து சத்தீஸ்கர் மாகணத்தின் ராய்பூர் நகருக்கு பயணம் செய்தனர். சித்ரலேகா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு வெள்ளிக்கிழமை(ஏப்ரல் 7) பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவருக்கு விபின் ரயிலில் பிரசவம் பார்த்துள்ளார்.

இது குறித்து மருத்துவ மாணவர் விபின் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

“சித்ரலேகா பிரசவ வலியால் வேதனையடைந்த நிலையை அதனை அறிந்த டிக்கெட் பரிசோதகர் ரயிலில் மருத்துவர் யாராவது இருக்கிறார்களா? என்று தேடிக்கொண்டிருந்தார். என்னை விட அதிக அனுபவம் பெற்ற மருத்துவர்களை உதவிக்கு வருவார்கள் என்று அமைதியாக இருந்துவிட்டேன். ஆனால், இரண்டாவது முறையாக தேடிக்கொண்டு வந்த போது, அவர்களுக்கு உதவி செய்ய முன் வந்தேன்.

நான் சித்ரலேகா இருந்த இடத்திற்கு சென்றபோது, அவருக்கு ரத்த போக்கு அதிகமாகவும் அதிக வலியுடனும் இருந்தார். அது ஒரு சிக்கலான பிரசவமாக இருந்தது. குழந்தையின் தலைக்கு பதில் அதன் தோள்கள் கருப்பையில் இருந்து பிறப்புறுப்பிற்கு வரும் பாதையின் வெளியே இருந்ததுதான் சிக்கலுக்கு காரணம். உடனே நான் அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ் மூலம் என்னுடைய கல்லூரியின் மருத்துவ குழுவிற்கு அனுப்பினேன். அந்த சிக்கலான பிரசவத்தை செய்ய வேண்டிய முறையை மருத்துவர் ஒருவர் எனக்கு தொலைபேசி மூலம் கூறினார். குளிர்ந்த நீரை கொண்டு முதலில் ரத்த போக்கை நிறுத்தினேன். கர்ப்பப்பையிலிருந்த தண்ணீர் முழுவதும் வற்றியிருந்தது. ரயிலிருந்த மருத்துவச்சி ஒருவர் எனக்கு உதவி செய்தார்” என்று தெரிவித்தார்.

நாக்பூர் ரயில்வே மருத்துவமனைக்கு ரயில் ஓட்டுநர் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அம்மருத்துவமனையை சேர்ந்த பெண் மருத்துவர் தலைமையில் ஒரு குழு நின்றுக்கொண்டிருந்தது. அகமதாபாத்-புரி எக்ஸ்பிரஸ் அங்கு வந்ததும், அவர்கள் சித்ரலேகா மற்றும் அவருடைய குழந்தையை பரிசோதித்தனர். குழந்தையும் தாயும் நன்றாக இருப்பதை உறுதி செய்த பிறகு, அவர்களுக்கு தேவையான மருந்துகளை கொடுத்து அவர்கள் பிரயாணத்தை தொடர உதவி செய்தனர்.

மேலும் படிக்க