April 16, 2018
தண்டோரா குழு
WhatsApp-ல் ஏற்கனவே அழித்த மீடியா Files-களை மறுபதிவிறக்கம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் அதிகம் மக்களால் பயன்படுத்தப்படும் குறுஞ்செய்தி செயலியில் வாட்ஸ் அப் முதலிடத்தில் உள்ளது. இதற்கு ஏற்ப அந்நிறுவனமும் பயனாளர்களுக்கு ஏற்ப பல்வேறு புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஆண்டிராய்டு செல்போன்களில் வாட்ஸ் ஆப்பில் வரும் மீடியா ஃபைல்களை தெரியாமல் அழித்து விட்டால் மீண்டும் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப்பில் வரும் ஜிஃப், வீடியோக்கள், ஆடியோக்கள், மற்றும் கோப்புகள் ஒரு முறை பதிவிறக்கம் செய்யப்பட்டால் செல்போனில் சேமிக்கப்பட்டுவிடும். சேமிக்கப்பட்ட ஃபைல்களை தெரியாமல் அழித்து விட்டால் அவற்றை மீண்டும் வாட்ஸ் ஆப்பில் சென்று பதிவிறக்கம் செய்ய முடியாது.
இதனால் பயனாளர்கள் பெரும் சிரமப்பட்டனர். இந்நிலையில், இந்தப் பிரச்சனையை தீர்க்கும் விதமாக மீடியா ஃபைல்களை மறு பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான வசதி ஆன்ட்ராய்டு போன் வாட்ஸ் ஆப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.