• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வாக்கு எண்ணிக்கை நாளை தள்ளி வைக்க வேண்டும் – புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி

April 27, 2021 தண்டோரா குழு

கோவை குனியமுத்தூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

ஸ்டெர்லைட் ஆலை திறப்பது குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் என்ற பெயரில் ஒரு சில கட்சியினரை மட்டுமே அழைத்து கூட்டம் நடத்தி இருப்பது ஏற்புடையது அல்ல என்று தெரிவித்தார். அந்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு புதிய தமிழகம் கட்சிக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போவதால் இந்த அரசுகள் முழு ஊரடங்கிற்கு தள்ளிக்கொண்டு செல்கின்றனர் என்றும் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி தற்போது மருந்துகள் தட்டுப்பாடு ஆக்சிசன் தட்டுப்பாடு இருக்கின்ற போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன என்று தெரிவித்த அவர் இதற்கு ஆளுநர் அவர்களே அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி மாவட்டங்கள் அளவில் ஊராட்சிகள் அளவில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி வருகின்ற மே1ம் தேதியிலிருந்து புதிய தமிழகம் கட்சியின் சார்பில் மாணவர் அமைப்பினர் மக்களிடையே வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இன்றைய சூழலில் இரும்பு தயாரிப்பு நிறுவனங்கள் மூலம் ஆக்சிஜன்களை உற்பத்தி செய்ய முடியும் என்றும் தெரிவித்தார். தற்பொழுது முகக் கவசங்கள் அணியாதவர்களுக்கு அபராதங்கள் விதிப்பதை விட்டுவிட்டு அவர்களுக்கு முகக் கவசங்கள் தந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

தடுப்பூசி தயாரிப்பதற்கு இந்தியாவில் இரண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது ஏனென்று தெரியவில்லை என்று கேள்வி எழுப்பிய அவர் தடுப்பூசி தயாரிக்கக் கூடிய வசதிகள் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் தடுப்பூசியை அதிகபட்சமாக 250 ரூபாய்க்கு கொடுத்தால் அனைவரும் போட்டுக் கொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.

தற்பொழுது வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வரும் நிலையில் மே 2ஆம் தேதியன்று நடைபெற இருக்கக்கூடிய தேர்தல் வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைக்கலாம் என்றும் அதற்கான நடவடிக்கைகளை அரசும் தேர்தல் ஆணையமும் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் தன்னிடம் அதிகாரத்தை கொடுத்தால் மூன்றே மாதங்களில் வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க முடியும் என்றும் கூறினார்.

மேலும் படிக்க