March 25, 2021
தண்டோரா குழு
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு நாளில் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கோவை தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர் வெங்கடேசன் கூறியிருப்பதாவது:
தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 6ம் தேதி அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே அனைத்து வணிகர்கள் மற்றும் நிறுவன உரிமையாளர்கள் தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை வழங்க வேண்டும்.
மேலும் தேர்தல் குறித்து தொழிலாளர்களுக்கு விடுப்பு வழங்கப்படுவது தொடர்பாக பெறப்படும் குறைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.