April 19, 2021
தண்டோரா குழு
வாக்குப்பதிவு இயந்திரங்களை யாராலும் ஹேக் செய்ய முடியாது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கமளித்துள்ளார்
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசிய அவர்,
மே 2 காலை 8.30 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். தபால் வாக்கு முதலில் எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்று முழு ஊரடங்கு தொடர்ந்தால் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்.
வாக்குப் பதிவு இயந்திரங்கள் மிக பாதுகாப்பாகப் பத்திரமாக காவல்துறை பாதுகாப்புடன் இருக்கிறது,அதில் எந்த தவறும் இதுவரை இல்லை அப்படி ஏதேனும் புகார் இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். மின்னணு வாக்குபதிவு இயந்திரம் என்பது கால்குலேட்டர் போன்றது அதில் முறைகேடு செய்ய முடியாது என்றார்.