• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வழக்கு ஆவணங்களைப் பதிவிறக்க CCTS இணையம் அறிமுகம்

March 1, 2017 தண்டோரா குழு

சாலை விபத்துகள் சம்பந்தமான வழக்குகளின் வழக்கு ஆவணங்களை ccts என்னும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யும் திட்டத்தினை கோவை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் கோவையில் அறிமுகப்படுத்தினார்.

தமிழக காவல் துறையில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் பல கால கட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அவை பயன்பாட்டிலும் இருக்கின்றன. அவ்வகையில் “குற்றம் மற்றும் குற்றவாளிகளை இணைக்கும் ccts என்னும் இணையதளம்” 2௦13-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் காணமால் போனவர்கள், அடையாளம் தெரியாத சடலங்கள், முதல் தகவல் அறிக்கை ஆகியவற்றைப் பதிவிறக்கும் செய்யும் வசதி நடைமுறையில் உள்ளது.

சாலை விபத்துகள் சம்பந்தமான வழக்குகளின் வழக்கு ஆவணங்கள் காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்கள் மூலமாக பெறுவதால் இன்சூரன்ஸ் கம்பெனிகள் அவர்களது பயனாளிகளுக்கு நிவாரணம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது எனக் கூறி இது குறித்து இன்சூரன்ஸ் கம்பெனிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அவ்வழக்கில் சாலை விபத்துகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை இணையதளங்களில் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தமிழக காவல் துறையினர் செயல்படுத்த வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சாலை விபத்துகள் சம்பந்தமான வழக்குகளின் வழக்கு ஆவணங்கள் ccts இணையதளத்தில் பதிவு செய்யப்படும் திட்டம் புதன்கிழமை அமலுக்கு வந்தது. இதன் காரணமாக சம்பந்தபட்டவர்கள் காவல் நிலையம் சென்று அந்த ஆவணங்களை வாங்கத் தேவையில்லை.

அந்த இணையதளத்தில் நேரடியாக ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அதன் ஒரு பகுதியாக கோவையில் இத்திட்டத்தை கோவை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் அறிமுகப்படுத்தினார்.

மேலும் படிக்க