கோவையில் வீட்டு உரிமையாளரால் வளர்ப்பு நாய் தாக்கப்படுவதை தடுக்க புகார் அளித்த நபரின் காலை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை போத்தனூர் காவல் எல்லைக்குட்பட்ட பிள்ளையார் புரம் பகுதியில் வசித்து வரும் சதீஷ் தன்னுடைய வளர்ப்பு நாயை தினமும் அடித்து துன்புறுத்தியுள்ளார். இதை பார்த்து மனவேதனை அடைந்த அதே பகுதியைச் சேர்ந்த நவீன் மேகா தம்பதியினர், விலங்குகள் நலவாரிய பொறுப்பாளர் பிரதீப்பிடம் கடந்த மாதம் 25ஆம் தேதி நடந்த சம்பவத்தின் வீடியோ ஆதாரங்களை ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பிரதீப் போத்தனூர் காவல் நிலையத்தில் எழுத்து மூலம் புகார் அளித்தார். இதன்பேரில் நாயின் உரிமையாளர் சதீஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதில் ஆத்திரமடைந்த சதீஷ் வீடியோ பதிவு கொடுத்த நவீன் மேகா வீட்டிற்குள் நேற்று சென்றார். இருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதைத்தொடர்ந்து சதீஷ் நவீன் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.இதில் நவீனின் கால் முறிந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்