• Download mobile app
11 Nov 2025, TuesdayEdition - 3562
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வலிமையான குடும்பம் தேசிய பிரசார இயக்கம்

February 18, 2021 தண்டோரா குழு

குடும்ப வன்முறைகளை தடுக்க ‘வலிமையான குடும்பம் வலுவான சமூகம்’ எனும் பிரசாரம் வரும் 19ம் தேதி முதல் துவங்குகிறது என்று ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் அறிவித்துள்ளது.

இது குறித்து ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில தலைவி கதீஜா காஜா கோவையில் கூறியதாவது:

கடந்த 10 ஆண்டுகளாக தேசிய மகளிர் ஆணையத்தில் பதிவான குடும்ப வன்முறைகளின் எண்ணிக்கையை விட இந்த கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் அதிகமான அளவு குடும்ப வன்முறைகள் பதிவாகியுள்ளன. குடும்ப உறவுகள் மற்றும் குடும்ப கட்டமைப்பை பற்றிய சரியான அறிவையும், புரிதலையும் ஏற்படுத்துவதன் மூலம் வலிமையான ஆக்கப்பூர்வமான சமூகத்தை நம்மால் கட்டமைக்க முடியும்.

அதன் அடிப்படையில் ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் வரும் 19 முதல் 28ம் தேதி வரை ‘வலிமையான குடும்பம் வலுவான சமூகம்’ என்ற மைய கருத்தில் தேசிய அளவில் பிரசார இயக்கம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு கதீஜா காஜா கூறினார்.

கோவை மாநகர மகளிரணி தலைவி ஜஹீனா அஹமத், நிர்வாகிகள் பர்ஜானா, சலீனா பஹி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க