• Download mobile app
03 Jul 2025, ThursdayEdition - 3431
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வரையாடுகள் பாதுகாப்பு மையமாக மாறுகிறது ஊட்டி மான் பூங்கா

August 23, 2018 தண்டோரா குழு

ஊட்டியில் உள்ள மான் பூங்கா, நீலகிரி வரையாடுகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு மையமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

மலைகளின் ராணி என்றழைக்கப்படும் ஊட்டி ஏரியின் மறு கரையில் மான் பூங்கா உள்ளது. இப்பூங்கா முதுமலை புலிகள் காப்பகம்
கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பூங்காவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மான் மட்டுமின்றி, பல்வேறு வகையான விலங்குகள், பறவைகள் மற்றும் ஊர்வன ஆகியவைகள் இருந்தன. இதனால், அங்குள்ள விலங்குகள், பறவைககளை காண ஏராளமான சுற்றுலாப்பயணிகள் அங்கு செல்ல துவங்கினர்.

இதற்கிடையில், அங்குள்ள விலங்குகளை பராமரிக்க மற்றும் பாதுகாக்க முடியாத நிலையில் பெரும்பாலான விலங்குகள் மற்றும் பறவைகள் வண்டலூர் வன உயிரின பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது. இதன் பின் அங்கு கடமான்கள் மட்டும் இருந்தன.அவைகளை வனத்துறையினர் பராமரித்து வந்தனர். இவைகளை காண சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.ஆனால், திடீரென கடந்த இரு ஆண்டுகளாக இப்பூங்கா மூடப்பட்டுள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

இந்நிலையில், இப்பூங்கா தற்போது நீலகிரி வரையாடுகளின் பாதுகாப்பு மையமாகவும், பராமரிப்பு மையமாகவும் மாற்றப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதில்,நீலகிரி மாவட்டத்தில் உள்ள வரையாடுகள் மட்டுமின்றி, வால்பாறை பகுதிகளில் விபத்துக்கள் மற்றும் பல்வேறு காரணங்களால் காயமடையும் வரையாடுகளை இங்கு கொண்டு வந்து சிகிச்சை அளித்து, அவைகள் பராமரிக்கப்படவுள்ளது.அழிவின் பிடியில் உள்ள வரையாடுகளை காக்கவே இந்த பூங்கா வரையாடுகள் காப்பகமாக மாற்றப்படவுள்ளது. அதேசமயம் இங்குள்ள கடமான்களை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து இதுவரை வனத்துறை அதிகாரிகள் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. விரைவில், வரையாடுகள் காப்பகமாக மாற்றுவதை மட்டும் வனத்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க