• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வரும் சட்டப் பேரவை தேர்தலில் கோவையில் 137 பேர் போட்டி !

March 23, 2021 தண்டோரா குழு

சட்டமன்ற தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிப்பட்ட நிலையில் கோவையில் 10 தொகுதிகளிலும் 137 பேர் போட்டியிடுகின்றனர்.

கோவை மாவட்டத்திலுள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 12 தொடங்கி 19 ஆம் தேதி வரை நடைபெற்றது.இதில் 10 தொகுதிகளிலும் சேர்த்து 317 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மார்ச் 20 ஆம் தேதி நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையின் பொது 176 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 141 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கு நேற்று (மார்ச் 22) நாளாக அறிவிக்கப்பட்டு இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நேற்று மாலையில் வெளியிடப்பட்டது. இதில் மேட்டுப்பாளையம், சூலூர், கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு சட்டப்பேரவை தொகுதிகளில் தலா ஒருவர் வேட்புமனுவை திரும்ப பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து நேற்று மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதன்படி 10 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 65 சுயேட்சை வேட்பாளர்களுடன் சேர்த்து 137 வேட்பாளர்கள் இறுதி வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில் 126 ஆண் வேட்பாளர்கள், 11 பெண் வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக கோவை தெற்கு, சிங்காநல்லூர் தொகுதகிளில் தலா 21 பேரும், கோவை வடக்கு தொகுதியில் 20 பேரும் போட்டியிடுகின்றனர்.

தொகுதி வாரியாக இறுதி வேட்பாளர் பட்டியல், மேட்டுப்பாளையம் தொகுதியில் 5 சுயேட்சை வேட்பாளர்கள் சேர்த்து 10 பேர் இறுதி வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இவர்களில் 9 ஆண்கள், 1 பெண் வேட்பாளர். சூலூர் தொகுதியில் 6 சுயேட்சை வேட்பாளர்கள் சேர்த்து 15 வேட்பாளர்கள் இறுதி வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். அனைவரும் ஆண் வேட்பாளர்கள். கவுண்டம்பாளையம் தொகுதியில் 5 சுயேட்சை வேட்பாளர்கள் சேர்த்து 10 வேட்பாளர்கள் இறுதி வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். இதில் 10 ஆண்கள், 2 பெண்கள்.
கோவை வடக்கு தொகுதியில் 11 சுயேட்சை வேட்பாளர்கள் சேர்த்து 20 வேட்பாளர்கள் இறுதி வேட்பாளர் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இதில் 19 ஆண்கள், 1 பெண்.

தொண்டாமுத்தூர் தொகுதியில் 4 சுயேட்சை வேட்பாளர்கள் சேர்த்து 10 வேட்பாளர்கள் இறுதி பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இவர்களில் 9 ஆண்கள், 1 பெண். கோவை தெற்கு தொகுதியில் 10 சுயேட்சை வேட்பாளர்கள் சேர்த்து 21 வேட்பாளர்கள் இறுதி வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இவர்களில் 19 ஆண்கள், 2 பெண்கள்.

சிங்காநல்லூர் தொகுதியில் 13 சுயேட்சை வேட்பாளர்கள் சேர்த்து 21 வேட்பாளர்கள் இறுதி வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இவர்களில் 19 ஆண்கள், 2 பெண்கள். கிணத்துக்கடவு தொகுதியில் 6 சுயேட்சை வேட்பாளர்கள் சேர்த்து 15 பேர் இறுதி வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். அனைவரும் ஆண் வேட்பாளர்கள்.

பொள்ளாச்சி தொகுதியில் 2 சுயேட்சை வேட்பாளர்கள் சேர்த்து 8 பேர் இறுதி வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இவர்களில் 7 ஆண்கள், 1 பெண். வால்பாறை தொகுதியில் 1 சுயேட்சை வேட்பாளருடன் சேர்த்து 6 பேர் இறுதி வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இவர்களில் 5 ஆண்கள், 1 பெண்.

கோவையில் 11 பெண்கள், 126 ஆண்கள் என 137 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

மேலும் படிக்க