• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வருமான வரிவரம்பை 8 லட்சமாக அறிவிக்க கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

November 16, 2022 தண்டோரா குழு

வருமான வரிவரம்பை 8 லட்சமாக அறிவிக்க கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

உயர்சாதி ஏழைகளுக்கு வருடத்திற்கு 8 லட்சத்தை வருட அளவுகோலாக நிர்ணயித்து உச்சநீதிமன்றம் சில தினங்களுக்கு முன் தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பிற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.இதற்கு ஆதரவளிக்காத அமைப்புகள், இந்தியாவில் வருமான வரி வரம்பு வருடத்திற்கு 5 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் உச்சநீதிமன்றம் கூறியது எவ்வாறு நியாயம் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் இந்தியாவில் வருமான வரி வரம்பை 8 லட்சமாக அறிவிக்க கோரியும் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள வருமான வரி அலுவலகம் முன்பு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் வருமான வரி உச்சவரம்பை 8 லட்சமாக அறிவிக்க கோரி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் படிக்க