• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வருமான வரிச்சோதனைக்கு பின் மீண்டும் மாஸ்டர் படப்பிடிப்புக்கு சென்ற விஜய்

February 7, 2020 தண்டோரா குழு

நடிகர் விஜய்யின் ‘பிகில்’ படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த ஐந்தாம் தேதி காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். மூன்றாவது நாளாக இன்றும் சோதனை நடைபெறுகிறது.

இதற்கிடையில், நெய்வேலியில் நடைபெற்ற மாஸ்டர் படப்பிடிப்புத்தளத்தில் இருந்த விஜய் நேற்று முன் தினம் வருமான வரித்துறையினர் அழைத்து வந்து அவரின் வீட்டில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் விஜய் வீட்டில் இரண்டு நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நேற்று மாலை முடிவடைந்ததாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விஜயின் இல்லத்தில் 23 மணி நேரத்திற்கும் மேலாக வருமான வரித்துறையினர் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மேலும் விஜய் வீட்டிலிருந்து எந்த ரொக்கமும் வருமான வரித்துறையினருக்கு கிடைக்கவில்லை, இது ஒரு சாதாரண விசாரணை என்றும் வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் வருமான வரிச்சோதனை முடிவடைந்த பிறகு நெய்வேலியில் நடைபெறும் மாஸ்டர் பட ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க