July 24, 2018
தண்டோரா குழு
2017-18 ஆம் நிதியாண்டில் பீகார்,ஜார்க்கண்ட் மாநிலங்களிலேயே அதிக வருமான வரி கட்டிய நபர் என்ற பெருமையை இந்திய கிரிக்கெட் வீரர் தோனி பெற்றுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த தோனி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுள்ளார்.கடந்த 2016-ம் ஆண்டு டி20 மற்றும் ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.
பிசிசிஐ-யுடன் ஒப்பந்தம் செய்துள்ள வீரர்களில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள தோனி,விளம்பரங்கள் மற்றும் கால்பந்து,ஹாக்கி தொடர்களுக்கான அணிகளை வைத்திருப்பது ஆகியவற்றின் மூலம் நல்ல வருவாய் ஈட்டி வருகிறார்.
அந்த வகையில்,நடப்பு நிதி ஆண்டில், 12 கோடியே 17 லட்சம் ரூபாயை தோனி,வருமான வரியாக செலுத்தியுள்ளார்.கடந்த நிதி ஆண்டில் தோனி 10 கோடியே 93 லட்சம் ரூபாயை வரியாக செலுத்திய நிலையில், தற்போது அவரது வருமானம் உயர்ந்துள்ளது.
இதன் மூலம் கடந்த 2017-18-ம் ஆண்டுக்கான பிஹார் மற்றும் ஜார்கண்ட் மண்டலத்தில் தனி நபர்களில் அதிகமான வருமான வரி செலுத்தியதில் தோனி முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.