• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வரிகள் வசூலிப்பு சலுகை திட்டம் நீடிப்பு – தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் வரவேற்பு

July 16, 2021 தண்டோரா குழு

தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) தலைவர் அஸ்வின் சந்திரன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்திய ஜவுளி தொழில் பன்னாட்டு சந்தையில் போட்டியிட ஒரு சமதளம் உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு முனைப்புடன் ஈடுபட்டு பல்வேறு முற்போக்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மத்திய மற்றும் மாநில வரிகள் மற்றும் வசூலிப்பு சலுகை திட்டத்தின் கீழ் இறக்குமதி வரி, சரக்கு மற்றும் சேவை வரிகளை தவிர, இதர மறைமுக வரிகளை திருப்பி கொடுப்பதன் மூலம், இந்திய ஆயத்த ஆடை மற்றும் வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதியாளர்கள் வரி ஏற்றுமதியை தவிர்த்து, சந்தை போட்டி திறனை அதிகரிக்க வழிவகை செய்கிறது.

ஏற்றுமதி ஜவுளி பொருட்கள் மீதான மாநில மற்றும் மறைமுக உள்ளீட்டு வரிகளை திருப்பி கொடுக்கும் வகையில், 2016-ம் ஆண்டில் இந்த திட்டத்தை முதன்முறையாக அரசு அறிவித்தது. மார்ச் 2019-ல் இச்சலுகைகளை உயர்த்தி அறிவித்ததன் மூலம் இந்திய ஆயத்த ஆடை மற்றும் வீட்டு உபயோக ஜவுளி பொருட்களின் ஏற்றுமதி ஸ்திரதன்மை அதிகரித்தது. நடப்பாண்டு ஜனவரி முதல் தேதியில் (RoDETP) ஆர்.ஒ.டி.இ.டி.பி என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டதால், இத்திட்டமானது நிறுத்தி வைக்கப்பட்டது.

கொரோனா தொற்றால் தொய்வடைந்துள்ள ஜவுளி தொழிலை ஊக்குவிக்கும் வகையிலும், பன்னாட்டு சந்தையில் உருவாகும் புதிய வாய்ப்புகளை நமது தொழில் துறையினர் பெறும் வகையிலும் மீண்டும் இத்திட்டம் தொடர வேண்டும் என்று ஏற்றுமதியாளர்கள் தரப்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை முன் வைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது ஆயத்த ஆடை மற்றும் வீட்டு உபயோக ஜவுளிக்கான இத்திட்டத்தை 2024-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை நீட்டித்துள்ளது.இதற்காக பிரதமர், மத்திய நிதியமைச்சர், ஜவுளித் துறை அமைச்சர் மற்றும் முன்னாள் ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

கொரோனா தொற்று தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜவுளி தொழிலுக்கு இது ஒரு ஊக்க மருந்தாக அமைந்துள்ளது. இதனால் வரும் மூன்று ஆண்டுகளுக்கு ஆயத்த ஆடை மற்றும் வீட்டு உபயோக ஜவுளிகளின் ஏற்றுமதி கணிசமாக உயர வாய்ப்புள்ளது. பல லட்சக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளும், நாட்டின் அந்நிய செலவாணியும் உயரும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க