• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வயல்களை காப்பாற்றகோரி விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

December 3, 2018 தண்டோரா குழு

வயல்களை காப்பாற்றக்கோரி விவாசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

வன விலங்குகள் பாதுகாப்பு குறித்த குரல் ஒரு புறமிருக்க, மற்றொருபுறம் விலங்குகளிடமிருந்து வயல்களை காப்பாற்றகோரி விவசாயிகள் குரல் எழுப்புகிறார்கள். கோவை மாவட்டத்தில் பல நாட்களாகவே வன விலங்குகளால் பொதுமக்கள், விவசாயிகள், என பலரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். இதன் காரணமாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோயமுத்தூர் மாவட்டக்குழு சார்பில் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அதில் வன விலங்குகளால் பொது மக்கள், விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த பாதிப்பால் தொடர்ந்து உயிர் சேதமும், வீடுகள், பயிர்கள் மற்றும் பண்னைகளுக்கு சேதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது, பொருளாதார ரீதியாக விவசாயிகள் பாதிக்கபட்டுள்ளார்கள். யானை, காட்டு பன்றிகள், யானைகள், சிறுத்தைகள், புலிகள் மான்கள், செந்நாய் போன்ற வன விலங்குகளை கண்காணித்து அடர்ந்த காடுகளுக்குள் இடமாற்றம் செய்யவும், விலங்குகள் சேதப்படுத்துபவைக்கு உரிய நஷ்ட ஈடு அளிக்கவும் மேலும் ஏற்படும் சேதத்தை தடுப்பது குறித்து சில தீர்மானங்களை கூறியுள்ளனர்.

மேலும் படிக்க