December 14, 2020
தண்டோரா குழு
கோவையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலகங்களில் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.
வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பாமக தொடர் போராட்டத்தை அறிவித்து ,இரயில் மறியல் போராட்டம்சென்னையில் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக,தமிழகம் முழுதும் உள்ள 12 ஆயிரத்து, 621 கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு,பா.ம.க.சார்பாக மக்கள் திரள் போராட்டம் நடைபெறும் என டாக்டர் ராமதாஸ் அறிவித்திருந்தார்.
அதன்படி கோவையில் பல்வேறு இடங்களில் பா.ம.க.வினர் கிராம நிர்வாக அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாநகராட்சி 64 வது வார்டுக்கு உட்பட்ட உப்பிலிபாளையம் கிராமத்தில் மகளிர் அணி ராஜேஸ்வரி வேலுமணி தலைமையில் கிராம நிர்வாக அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் டாஸ்மாக் பாட்டாளி மக்கள் தொழிற்சங்க மாநில துணை தலைவர் வேலுமணி உட்பட மாவட்ட நிர்வாகிகள் ஜீவா, பாலசஞ்சீவி, மருதமுத்து மற்றும் மகளிர் அணி புவனேஸ்வரி ஆகியோர் கலந்து கிராம நிர்வாக அலுவலரிடம் மனுவை வழங்கினர்.இதே போல கோவையின் பல்வேறு இடங்களில் பா.ம.கவினர் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.