• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வந்தே பாரத் ரயிலை சென்னையிலிருந்து கோவைக்கு மாலை 5 மணிக்கு இயக்க கோரிக்கை

March 30, 2023 தண்டோரா குழு

சென்னையில் இருந்து கோவைக்கும், கோவையில் இருந்து சென்னைக்கும் வரும் ஏப்ரல் 8ம் தேதி முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து கோவைக்கு மதியம் இயக்கப்படும் ரயிலை மாலை 5 மணி அளவில் இயக்க வேண்டும் என போசியா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான போசியா ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஜேம்ஸ் கூறியிருப்பதாவது:

சென்னை-கோவைக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்குவது மிகவும் மிகழ்ச்சியான செய்தி. இதன் மூலம் பல்வேறு தொழில்நிறுவனங்களை சார்ந்தவர்கள் பயன்பெறுவார்கள். கோவையில் இருந்து சென்னைக்கு தொழில் அலுவல் நிமித்தமாக தினமும் பல நூறு சென்று வருகின்றனர். அவர்களுக்கு இந்த ரயில் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

வந்தே பாரத் ரயில் சென்னையில் இருந்து கோவைக்கு மதியம் 2.20 மணிக்கு இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2.20 மணிக்கு பதிலாக மாலை 5 மணி அளவில் ரயிலை இயக்கினால் சென்னையில் இருந்து அலுவல் பணிகளை முடித்துவிட்டு கோவை வரும் பல ஆயிரம் தொழில் முனைவோர்கள், தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள். ரயில்வே துறை எங்களது கோரிக்கையை ஏற்று நேரத்தை மாற்றி அமைத்து தந்தால் நன்றாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க