• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வந்தாச்சு புதிய வாக்குப்பதிவு இயத்திரம் இதில் முறை கேடுகளை நிரூபித்து காட்ட முடியுமா?

May 20, 2017 தண்டோரா குழு

மின்னணு வாக்குப்பதிவு இயத்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்பதை ஜூன் 3 முதல் பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் நிரூபித்துக்காட்டலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மின்னணு வாக்குபதிவு முறைகேடுகள் நடப்பதாக பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இப்புகார்களை முற்றிலும் மறுத்த, தேர்தல் ஆணையம் முடிந்தால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்துகாட்டலாம் என்று சவால் விடுத்தது.இந்நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

வாக்கு இயந்திரங்களில் முறைகேடு செய்யப்பட்டதாக சில அரசியல் கட்சிகள் புகார் தெரிவித்திருந்தன. இதனை 5 மாநில தேர்தல் முடிவுக்கு பிறகு அரசியல் கட்சிகள் புகார் அளித்திருந்தன. இதையடுத்து இனிவரும் தேர்தல்களில் வாக்குச்சீட்டு சரி பார்க்கும் இயந்திரம் பயன்படுத்தப்படும். இதற்காக 16.5 லட்சம் வாக்குச்சீட்டு சரி பார்க்கும் இயந்திரகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன என்றார்.

மேலும், வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைத்து வாக்குச்சீட்டு சரி பார்க்கும் இயந்திரத்தை பயன்படுத்தும் முறையை செயல்முறை விளக்கும் மூலம் விளக்கப்பட்டது.இதிலும், “ஏதேனும் குறை இருந்தால் ஜூன் 3 முதல் பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் அதனை நிரூபித்துக்காட்டலாம் என்றும் சுட்டிக்காட்டப்படும் குறைகளைக் கவனத்தில் கொண்டு திருத்தம் செய்யப்படும்.” என்றும் இந்த சோதனை மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தப்படும் என்றும் நசிம் ஜைதி கூறினார்.

அதைபோல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் குறைப்பாட்டை நிரூபிக்க விரும்புபவர்கள் அதிகபட்சம் மூன்று பேர் கொண்ட குழுவாக மே 26ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தங்கள் விண்ணப்பத்தை தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும் படிக்க