January 30, 2021
தண்டோரா குழு
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பொலிவுபடுத்தப்பட்டு கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலை
வண்ணமயமாக காட்சியளிக்கிறது.
நாட்டில் உள்ள நகரங்களை பொலிவுறச்செய்யும் நோக்கில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி, கோவையை பொலிவுபடுத்தவும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டும் ரூ.1500 கோடி ஒதுக்கப்பட்டு,நகரில் உள்ள சாலைகள் அழகு படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தன.
அந்த வகையில், கடந்தாண்டு கோவை மணிக்கூண்டு சாலை பகுதிகள் வர்ணம் பூசப்பட்டு சோதனை அடிப்படையில் பொலிவு படுத்தப்பட்டன.அதேபோல தற்போது கிராஸ்கட் சாலை சிக்னல் துவங்கி, வடகோவை மேம்பாலம் வரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை முழுவதும் வர்ணம் பூசப்பட்டு, ஓவியங்கள் வரையப்பட்டதுடன், சாலை ஓரங்களில் பொதுமக்கள் அமரும் இடங்கள், நடைபாதையில் இரு ஓரங்களிலும்,பூச்செடிகள் என கிராஸ் கட் சாலை தற்போது ஜொலித்து வருகிறது.