• Download mobile app
13 Feb 2026, FridayEdition - 3656
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வணிக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கி உரிய காலத்தில் வரி வசூல் செய்திட வரி வசூலர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் உத்தரவு

June 21, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் சொத்து வரி மண்டல பகுப்பாய்வு தொடர்பாக 100 வார்டுகளிலும் உள்ள வீதிகள், தெருக்கள் அனைத்தும் ஏ ஜோன், பி ஜோன், சி ஜோன், டி ஜோன் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட டி.பி.ரோடு ஏ ஜோன்னி-ல் வகைப்படுத்தப்பட்டுள்ளது.இதனை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் நேரில் ஆய்வு செய்து சொத்துவரி மற்றும் தொழில்முறை வரி செலுத்த சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கி உரிய காலத்தில் வரி வசூல் செய்திட வரி வசூலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் வ.உ.சி பூங்காவை புனரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட பொறியார்களுக்கு அறிவுறுத்தினார்.

முன்னதாக கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண் 69க்குட்பட்ட சிந்தாமணி சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் வருகைப்பதிவேடுகள் மற்றும் தூய்மைப்பணியார்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது உதவி கமிஷனர்கள் சங்கர், சரவணன், செந்தில்குமார் ரத்தினம் (வருவாய்), உதவி நகரமைப்பு அலுவலர்கள் பாபு, கலாவதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க