July 7, 2018
கோவை அன்னூர் அருகே உள்ள கணேசபுரத்தில் ஸ்ரீ வாராகி அம்மன் ஸ்டீல் லிமிட்டெட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.இங்கு ஒரிசா மாநிலத்தைச்சேர்ந்த 43 தொழிலாளிகள் கடந்த மார்ச் மாதம் ஒப்பந்ததாரர் மூலம் வேலைக்கு சேர்ந்துள்ளனர்.இவர்களுடைய ஒப்பந்ததாரர் அவெஹய் ரயுத்ராய் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மே மாதம் 15 நாள் சம்பளமும்,ஜீன் மாதம் முழுச்சம்பளமும் வழங்காமல் இழுத்தடித்து வந்துள்ளனர்.தொழிலாளர்கள் சம்பளத்தை நிர்வாகத்திடம் கேட்டால் ஒப்பந்ததாரரிடம் கொடுத்து விட்டதால் அவரிடம் கேட்க சொல்வதாகவும்,ஒப்பந்ததாரர் நிர்வாகம் பணம் கொடுக்கவில்லை என மாற்றி,மாற்றி குறை சொல்லி வருவதால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து இச்சம்பவம் குறித்து உழைப்போர் உரிமை இயக்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தனர்.அப்போது தொழிலாளர்கள் பட்டினியால் இருப்பதால் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.தொழில் துறை ஆய்வாளரிடம் பேசிய ஆட்சித்தலைவர் திங்கள் கிழமை மனு நீதி நாளில் வந்து மனு கொடுக்க அறிவுறுத்தினார்.
இதனையடுத்து மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீ வாராகி நிர்வாகத்தை கருமத்தம்பட்டி காவல் நிலையம் அழைத்து தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய தொகையை வழங்குமாறு கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.