December 25, 2020
தண்டோரா குழு
அடல் பிகாரி வாஜ்பாய் 97 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்டம் வடவள்ளி மண்டல் ஓபிசி அணி சார்பாக உறுப்பினர் சேர்க்கை மற்றும் மோடியின் மருத்துவ காப்பீடு திட்டம் 50 பேருக்கு வழங்கப்பட்டது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 97 பிறந்த நாளை தமிழகம் முழுவதும் பா.ஜ.கவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக கோவை மாநகர் மாவட்டம் வடவள்ளி மண்டல் ஓபிசி அணி சார்பாக உறுப்பினர் சேர்க்கை
மற்றும் மோடியின் மருத்துவ காப்பீடு திட்டம் 50 பேருக்கு வழங்கப்பட்டது.
இந்த விழாவில் ஓபிசி அணி மாவட்ட தலைவர் சுதாகர்,மாவட்ட பொதுச்செயலாளர் முரளிதரன், கோவை மாநகர் மாவட்ட துணைத்தலைவர் கோவிந்தராஜ்,தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட தலைவர் அண்ணாமலை நாதன்,ஓபிசி அணி மாவட்ட செயலாளர் சௌமியா,மாவட்ட செயற்குழு உறுப்பினர் காயத்ரி,ரம்யா, வடவள்ளி மண்டலத் தலைவர் வேல்முருகன், முன்னாள் மண்டல தலைவர் ஆனந்த் பொது செயலாளர் பூபாலன், மண்டல் பொருளாளர் ஜெயப்பிரகாஷ், துணைத் தலைவர் அருண்,பாலதண்டாயுதபாணி, எம் கே ராஜன், கண்ணம்மாள், ஓபிசி அணியின் வடவள்ளி மண்டலத் தலைவர் மனோஜ் ,வடவள்ளி மண்டல் செயலாளர் சித்ரா, மண்டலத் துணை தலைவர் பிரியா, மண்டல பொதுச் செயலாளர் கோகுல் , மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.